Skip to main content

ஸ்ரீரங்கம் - 1


சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சிறுகதை தொகுப்பில் உள்ள கோட்டோவியங்களைப் பார்த்தீர்பீர்கள்.


இதனை வரைவதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு- சுஜாதா, ஸ்ரீரங்கம். கடந்த ஆண்டு(2003) ஜூலை-ஆகஸ்டு மாதம் சுஜாதாவுடன் பேசிக் கொண்டியிருந்த போது இந்த எண்ணம் தோன்றிற்று. சினிமாவில் கதைகளுக்கு சம்பந்தம் இல்லாமல் வரும் காமெடி டிராக் போல, கதைக்கு சம்பந்தம் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் உள்ள சில முக்கியமான இடங்களை கோட்டோவியங்களாகப் பதிவு செய்வது என்று முடிவு செய்தேன்.


வரைவதற்கு ஒப்புக் கொண்ட நாள்முதல் எனக்குள் ஒரு சின்ன பயம் பற்றிக் கொண்டது. காரணம் நான் கடைசியாக வரைந்தது 10 வருடம் முன்னால்! மற்றொன்று கதை நான் பிறப்பதற்கு முன்பு நிகழ்ந்ததால் அன்றைய ஸ்ரீரங்கத்தை வரைய வேண்டும்!


ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு, தமிழ் இலக்கியத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கத்தின் வரலாறு, கல்வெட்டுகள், அதன் பின் கோயிலுக்குள் செல்லலாம் என்று இருக்கிறேன்.


நான் பார்த்த ஸ்ரீரங்கத்தை எனது அனுபவத்தையும் அதன் சரித்திர சிறப்புக்களுடனும் வரும் வாரங்களில் தரவுள்ளேன். ஸ்ரீரங்கத்தைப் பற்றி புத்தகங்கள் படித்தும், சொல்லிக்கேட்டும் எனக்கு தெரிந்த வரை எளிமையாக எழுதியிருக்கிறேன். பிழையிருப்பின் திருத்திக் கொள்கிறேன்.


ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு:



ஸ்ரீரங்கம் கோயில் விமானம்(பார்க்க படம்) பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.

இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.


கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் தி ரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.


இக்கதையில் சோழ மன்னர்கள் நிகழ்த்தியனவாகக் கூறப்பட்டவை வரலாற்றுக்கு புறம்பான "Anachronism". இக்கோயில் கருவறையானது வரலாறு தோன்றாத காலத்திற்கு மிக மிக முற்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் தர்மவர்ம சோழன், கிளிச் சோழன் என்பவர்கள் பற்றி வரலாற்று நூல்களில் குறிப்பு ஏதும் இல்லை. மிகவும் போற்றி வழிபடப்படுகின்ற ஒரு கோயிலை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழமை வாய்ந்ததாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையில் இந்த வரலாற்றுக் கதை அமைந்திருக்கலாம்.




Old Comments from my previous blog.


Post by Jsri

அந்த விமானம் படம் அவ்ளோ நுணுக்கமா வரைஞ்சிருக்கீங்க. ரொம்ப perfect!

Fri, May 28 2004 2:32


Post by Jsri

தேசிகன், இப்பத்தான் 'தென்திசை இலங்கை நோக்கி'ன்னு ஒரு இழை எல்லா இடத்துலயும் முடிஞ்சுத(முடிஞ்சுடுத்தா?). திரும்ப ஞாபகப் படுத்திட்டீங்க. ஓவியங்கள் அருமை தேசிகன். முதல் படம், கீழவாசல் தானே?! Girls High School போற வழி. என்னவோ போங்க. :-)

Fri, May 28 2004 2:32


Post by Pradeep

Desikan Superb Sketches! Amazing.. The story about vibeeshanan which you have written, if i am not wrong, the same kind of story is there for Ravanan also, right? Ravanan carries siva lingam, he wants to take bath, he asks pillayar {maaruvedathil} to take care of it, don't keep it down, once he returns from his bath he saw that sivalingam in the floor. is that right? ippadi ethanai kathai thaan namma puraanathula vachurkkanga?

Fri, May 28 2004 3:29


Post by Jsri

தேசிகன், இப்பத்தான் 'தென்திசை இலங்கை நோக்கி'ன்னு ஒரு இழை எல்லா இடத்துலயும் முடிஞ்சுது(முடிஞ்சுடுத்தா?). திரும்ப ஞாபகப் படுத்திட்டீங்க. ஓவியங்கள் அருமை தேசிகன். முதல் படம், கீழவாசல் தானே?! Girls High School போற வழி. என்னவோ போங்க. :-) அந்த விமானம் படம் அவ்ளோ நுணுக்கமா வரைஞ்சிருக்கீங்க. ரொம்ப perfect!

Fri, May 28 2004 3:29


Post by srishiv

hi pradeep it is aathmalingam story yar...anyway the stories are more or less similar in the purana days, but all for the society's controlled path...is it not desi?? anyway, the pictures and the story was well written by u desi... anbudan, srishiv..

Fri, May 28 2004 5:34


Post by Martin

Desikan, Liked your intro on Srirangam and Sujatha (Srirangam S. R). Awaiting the next instalment eagerly, -Martin

Sat, May 29 2004 7:32


Post by பாரா

அன்புள்ள ஸ்ரீ.தேசிகன், உங்கள் ஓவியங்கள் போலவே எழுத்தும் லட்சணமாக இருக்கிறது. தொடர்ந்து, விடாமல் எழுதுங்கள். வாழ்த்துகள். பாரா

Sat, May 29 2004 10:37


Post by PK Sivakumar

Hi Desikan, Vaanga. vaanga. Ipo thaan unga blog parthean. Romba nalla iruku ellame. Adikadiyum thodarnthum ezuthunga. unga oviyangal ellamum podunga. Sa.kandasamy writing padikara madiri, alangaram illaamal aana manasai thodara madiri ezuthareenga :-) Keep it up.

Sat, May 29 2004 10:37


Post by Princess

Beautiful sketches.:-) Want more!

Sat, May 29 2004 1:35


Post by Mahesh

Ellaarum yEn avarai Desi - Desi-nnu koopidariinga :-) Desikan-nnu muzhusaa koopidunga makkaLE. - Mahesh PadangaL arumai - Desikan. (neenga veLi naadE pOga viruppap padamaateengaLaMe..?)

Sat, May 29 2004 11:39


Post by Desikan

Jaysshree, Pradeep, Martin, Shiv, Pavithra, PKS - Thanks for your comments. Pa.Raghavan - Thanks a lot for your motivation. Mahesh - Ugalukku yaar sonnathu ? A small request - I would be happy if you can give your email address in the comments, so that I can reply to you in person.

Mon, May 31 2004 3:31


Post by Srinivas Venkat

உங்கள் வலைப்பதிவின் ஆரம்பமே 007 -பட வேகத்தில் சுறுசுறுப்பாக சூடு பிடித்து விட்டது. வாழ்த்துக்கள். பதிவுகளுடன் படங்களும் தொடரட்டும்.

Mon, May 31 2004 5:35


Post by Haranprasanna

superb sketch.

Mon, Jun 21 2004 3:27


By Desikan, at Tue Nov 02, 06:56:20 PM IST


Really nice sketches.

I have read Srirangathu

thevatheigal Part II in aananda

vikatan. Not I part. The story

is also linked with

thiruchirappalli vuchi pillayar

koil & the swelling in the

pillayar's head.


my mail id anandham@linuxmail.org


By Anandham, at Wed Mar 30, 02:20:11 PM IST

Comments