Skip to main content

அந்நியன்


வேதாளத்திற்கு மூடவுட் + தலைவலி.
"என்ன ஆச்சு நேத்திக்கு ரொம்ப நேரம் மரத்தில தொங்கினியா ?" என்று விக்கிரமாதித்தன் பேச்சு கொடுத்தான்.
"அந்நியன் நைட் ஷோ படம் பார்த்துட்டு வரும் போதே மணி இரண்டு, அப்புறம் எப்படி மரத்திலே தொங்குவது" என்று வேதாளம் அலுத்துக்கொண்டது.
"அதற்கு என்ன படம் நல்லாதானே இருந்தது"
அமிர்தாஞ்சன் பாட்டிலை தேடியவாரே "ஏன் சொல்லமாட்டே, உங்க ஆள் படமாச்சே" என்றது வேதாளம்.
"படத்தில விக்கிரம் ஆக்டிங் எவ்வளவு சூப்பராக இருந்தது, அதுவும் மூணு வேஷத்தில என்னாமா நடிச்சிரிக்கார்" என்றான் விக்கிரமாதித்தன்.
"விக்கிரம் நல்லாதான் செய்திருக்கார், என்ன தன் பங்க் தலையை முடிந்து குடுமி போட்டுக்கொண்டு வாயை இழுத்து இழுத்து பேசினால் ரூல்ஸ் ராமானுஜம் என்ற அம்பி, செம்பட்டை டை அடித்துக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலம்(c'mon nandy ...let's go yo-yo) பேசினால் ரெமோ, சனல் கயிறு போல் தலை மயிரை முகத்தின் (அல்லது காமிரா லென்ஸ் முன்) முன்னாடி போட்டுக்கொண்டு கண்ணை உருட்டினால் அந்நியன். இது ஆக்டிங் இல்லை மேக்கப். ஆக்டிங் என்றால் கடைசியில் அம்பியாகவும், அந்நியனாகவும் மாறி மாறி வராரே அதுதான்." என்று வேதாளம் விக்கிரமாதித்தனை கரெக்ட் செய்தது.
"ஹாரிஸ் ஜெயராஜ், இசை எப்படி நன்றாகதானே இருந்தது அதுவும் அந்த "ஐயங்காரு வீட்டு அழகே...கலக்கிட்டாரு"
"பாட்டெல்லாம் கேசட்டில் கேட்க சுமார்தான். படத்தோடு பரவாயில்லை. ஷங்கர் ஹாரிஸ் ஜெயராஜுகு பாட்டுக்கு மட்டும் தான் பணம் கொடுத்திருப்பார்னு நினைக்கிறேன், என்னா BGM எனக்கு கேட்கலையே!"
"அப்படியா நான் கவணிக்கலேயே"
வேதாளம் அமிர்தாஞ்சன் தடவிக்கொண்டே "அமாம் நீ எங்கே இதலாம் கவனிக்க போற, படம் முழுக்க பாப்கார்ன் சாப்பிட்டுண்டே இருந்தையே"
"கதை நல்லாதானே இருத்தது"
"எனக்கு என்னமோ இந்தியன்-2 பார்த்த ஃபீலிங். அதுவும் அந்நியன் வாய்ஸ் அப்படியே கமல் தாத்தா போலவே இருந்தது. இந்தியனில் லஞ்சம் பற்றி சுஜாதா ஒரு வசனம் எழுதியிருப்பார் ( நிழல்கள் ரவியை கொலை செய்யும் முன்) அதே போல இதுலேயும் நிறைய வருது. வசனம் மட்டும் இல்லேனா படம் ஊத்திருக்கும்."
"படத்தில் ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் அற்புதமா இருக்கு அது உன் கண்ணுக்கு தெரியலையா?" என்றான் விக்கிரமாதித்தன் கோபமாக.
"பேசாம இந்த படத்துக்கு மேட்டரிக்ஸ் ரீலோடட் என்று பெயர் வைத்திருக்கலாம். அப்புறம் கண்ணும் கண்ணும் நோக்கியா பாட்டில், காமிராமானின் உருவம் Petronas Twin டவரில் ரிப்லெக்ஷனாக தெரிகிறதே அது ரவிமரனா அல்லது மணிகண்டனா? " என்றது வேதாளம்.
"ஷங்கரின் சமுதாய அக்கரையை பார் இது போல் தமிழில் படம் வந்திருக்கா?"
"எல்லாம் சரி, அம்பி சதாவிற்கு சங்கித சான்ஸ் கேட்பதற்கே சாரியின் சிபாரிசுவுடன் தானே போகிறார், ஆனால் அங்கே ஒரு MP சிபாரிசுக்கு எதிராக பேசுகிறாரே?. அப்புறம் இவ்வளவு ரூல்ஸ் பேசும் அம்பு வண்டியில் போகும் போது ஏன் ஹெல்மெட் அணிவதில்லை, குடுமி இடிக்கும் என்பதாலா ?"
"சரி, சரி, ஒரு சின்ன தப்பு இதை ஏன் பெரிசா எடுத்துக்கிறே" என்றான் விக்கிரமாதித்தன்.
"தப்பு என்ன பனியன் சைஸா..ஸ்மால், மீடியம், லார்ஜ்னு சொல்ல…எல்லா தப்பும் ஒரே சைஸ் தான், அதோட எஃபெக்ட் எப்போதுமே எக்ஸ்டிரா லார்ஜ் தான்" என்று வேதாளம் அந்நியனில் வந்த வசனத்தை சொல்லி காண்பித்தது.
"இந்தியாவை திருத்த அந்நியன் போல் யாராவது இருந்தால் தான் முடியும்"
"சபாஷ், தனிமனித ஒழுக்கம் தவறியவர், சட்டத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், எச்சில் துப்பும் சோம்பேரி (இந்த மனிதரால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை அதனால் கொன்று விடலாம்!. ) என்று எல்லோரையும் சகட்டு மேனிக்கு கருட புராணத்தில் சொல்லியிருப்பது போல் கொலை செய்வது கொஞ்சம் ஓவர். எந்த பிரச்சனைக்கும் கொலை தீர்வாகாது. அப்புறம் சதா, சங்கீத சபா செயலாளர் போன்றோரின் தப்பை மன்னிக்கும் அம்பி, மற்றவர்களை மன்னிக்காதது ஏன்னோ? "
"என்ன நீயும் அவங்களோட கட்சியில் சேர்ந்துட்டையா என்ன ?" என்றான் விக்கிரமாதித்தன்.
"அவங்களோட கட்சி என்றால் யாரோட கட்சி?" என்று வேதாளம் புரியாமல் கேட்டது.
"மெசேஜை பார், மத்ததை பார்காதே. நாட்டு நலம், ஒழுக்கம், ரூல்ஸ் எல்லாம் எப்படி வலியுருத்தப்பட்டிருக்கிறது அதற்கே இரு சபாஷ் போடலாம்" என்றான் விக்கிரமாதித்தன் விடாமல்.
அப்போது வேதாளம் ஜன்னலுக்கு வெளியே பார் என்றது. அங்கு அந்நியன் ரூல்ஸ் ராமானுஜன் போஸ்டரில் சிரித்துக்கொண்டிருந்தான்.
அதற்கு ஒரு இன்ச் மேலே "இங்கு நோட்டிஸ், எழுதவோ, ஒட்டவோ கூடாது" என்று இருந்தது.



Old comments from my previous Blog


//வசனம் மட்டும் இல்லேனா படம் ஊத்திருக்கும்."//


//"ஏன் சொல்லமாட்டே, உங்க ஆள் படமாச்சே"//


By ரவியா, at Mon Jul 11, 12:55:34 PM IST  


வித்தியாசமான ஒரு விமர்சனம் தேசிகன். நடுநிலையாக இருந்து விமர்சித்து இருக்கிறீர்கள்.


எப்படியும் இந்த வாரமாவது இப்படத்தைப் பார்க்க வேண்டும்.


By Moorthi, at Mon Jul 11, 12:56:58 PM IST  


நல்ல நடுநிலையான விமர்சனம் தேசிகன். வேதாளமும் விக்கிரமாதித்தனும் சுவையாக அலசியிருக்கிறார்கள்.


By Sudharsan, at Mon Jul 11, 02:18:47 PM IST  


அன்னியன், நம் தமிழ் சினிமாவுக்கு வந்த ஒரு சனியன் ;) படம் வேஸ்ட், பைசாவுக்கு நஷ்டம், என்னை மாதிரி டௌன்லோட் பண்ணி பார்த்திடுங்கப்பா....பணத்த செலவு பண்ணாதீங்க.....மாட்ரிக்ஸ் பார்க்கற மாதிரி தான் இருக்கு...மலேசியா ஏர்போர்ட்கூட ஒழுங்கா காமிக்கல...:(
ஷிவ்..


By srishiv, at Mon Jul 11, 04:04:11 PM IST  


"ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் இல்லை எனக்கும் இல்லை"


இதுதான் பொதுவிதி


"அப்புறம் சதா, சங்கீத சபா செயலாளர் போன்றோரின் தப்பை மன்னிக்கும் அம்பி, மற்றவர்களை மன்னிக்காதது ஏன்னோ?"


என்கும் என்பதற்குள் அடங்கிச்சேசேசேசேசேசேசேச......


By குமரேஸ் - Kumaraess, at Mon Jul 11, 06:14:48 PM IST  


நடுநிலையான விமர்சனம்


By rajkumar, at Mon Jul 11, 07:52:52 PM IST  


Desikan,
Good review. Even though Anniyan has a flavour of Indian/Mudhalvan still it is good. In midst of Masala tamil movies, anniyan stands apart. If some hollywood flick defies logic,we appreciate, but we don't have the broadmind to appreciate our indian movies.
The punch of your review is the last line !!!!


Regards,
Subbu


By Subbul, at Mon Jul 11, 10:17:20 PM IST  


Though I feel the movie has the shade of indian, kanda kasumalam padangalukku naduvule, ithu evlovo parava illa. To me, Good is not 100% compliance.


appuram yaruppa athu download panni padathai pakka suggest pannathu, avarukku karuda puranam oru copy parcel...


By Anonymous, at Tue Jul 12, 05:21:23 AM IST  


Good review.
I would recommend to watch this movie from internet and donate the money to some social organisation.


It is a criminal waste to spend money for this kind of movies
-Nambi


By Nambi, at Tue Jul 12, 05:51:24 AM IST  


This post has been removed by the author.


By Aravindan, at Tue Jul 12, 06:32:13 PM IST  


Good review.


hv been reading your blog for quite some time now.


nalla ezhudareenga. paarattukkal


( idha neriya naalukku munnadi ezhudhanumnu nenaichen...aana innikku oru mudivukku vandhutten...


eludi poduvom le:-)? )


Regards


Vasu


By Vasu Ramanujam, at Tue Jul 12, 08:41:10 PM IST  


Desikan -


Excellent review. You have covered all aspects.


BTW, did you ask sujatha abt the points they missed? Forgiving Nandini, two wheeler riding without helmet etc?


By Lucent Raghavan, at Thu Jul 14, 05:44:07 PM IST  


anniyan movie is still good though it is like Indian-2 and muthalvan. Vikaram acted fantastically (would get the next national award) particularly in climax. Dialogues are superb. Second half is moving fastly. Though the reasons are silly to kill a person, the standard of picturisation makes us to watch it interstingly.


Thanks,
Prasanna


By Haranprasanna, at Fri Jul 15, 07:28:44 AM IST  


The movie was just to bring out the common mistakes that people commit. Tt is just aimed to point these out.


The base is more important than the superficial presentation


Desikan vimarsanam nanna erunthathu


Thanks
BAlaji S


By Anonymous, at Fri Jul 15, 04:42:48 PM IST  


desikann sir, I agree with ur comment that the movie was good bcos of sujatha's dialogue. Also there are few more things to be highlighted in the movie. The picturisation of songs(Kumari song), Vikrams love letter Vikrams acting in the Climax. Graphics new to Tamil cinema (but feel like watching Matrix Reloaded in Tamil). I have seen the movie twice as i loved the dialogues. songs are not as good. A.R.Rahmans music would have given more for the movie.


Note : I have read ur comments and posting my comments at 6 am.


By oorvashe, at Mon Jul 18, 06:31:46 AM IST  


I totally agree with vedalam.
Anniyan is a good movie in terms of technical excellence & acting from Vikram. base is too much fragile. Dialogues are good.


Subbu says "If some hollywood flick defies logic,we appreciate, but we don't have the broadmind to appreciate our indian movies"
I disagree with this.
I think that is abt Matrix. the storyline of Matrix is such that evrything is possible. but Anniyan is a normal human being. and he does some non - human action. this is too much.
anyway my appreciation to the stunt team. making this kind of syunt effort is extra ordinary.
After the revelation of Ambi's multi personality disorder in the second half I felt the knot is removed. evrything falls into place as u expect.
good movie to watch once. u can see it anywhere as u wish(in internet or in theatre)


anandham


By Anandham, at Mon Jul 18, 10:09:16 AM IST  


வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!


By மாயவரத்தான்..., at Thu Jul 21, 09:56:52 PM IST  


hey,
Beantown Blogbash.
Details here


By kaashyapeya, at Sat Jul 23, 03:44:11 PM IST  


Bangalore Bloggers' Meet. Details here.


By Mandar, at Fri Jul 29, 05:54:13 PM IST  


Desi,


Read your review about Anniyan. Your sense of humour and timing sense is awesome.
A really good review of the movie. I happened to download the movie and watch it. :)


--Purni


By Purni Danaraj, at Thu Aug 04, 12:01:46 AM IST  


Ipdilaankooda padam pakamudiyuma? Me on vikramadhityan's side. Padam-la popcorn sapda porthukku thaan. After all, we are all normal human beings unglamaardhiya athimber.......
Lavanya


By Anonymous, at Wed Aug 17, 03:40:58 PM IST  

Comments