Skip to main content

ஒரு தேசி(கன்?)யின் Diary குறிப்பு

[%image(20050922-frame0.gif|80|111|Dairy0)%]

இது சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது. இதை படித்துவிட்டு இன்றும் யாராவது எனக்கு ஈ-மெயில் அனுப்புவதற்கு காரணம் டாலர் ரூபாய் மதிப்பைத் தவிற மற்ற எல்லாம் மாறாதது தான். 
 என்னுடைய பழைய வளைத்தளத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இங்கே தந்துள்ளேன்.
இதற்கு sequelலாக "பெண் தேசியின டைரி குறிப்பு" எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கிறது. அதை சீக்கிறம் முடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.


Nov 13, வியாழன்


[%image(20050922-frame1.jpg|200|106|Dairy1)%]

Americaவில் எனது முதல் நாள். NY JFK airport, ஒரு புதிய அனுபவம். Steve ABCDயில் பணிபுரிபவர், என்னை அழைத்துச்செல்ல வந்திருந்தார். என்னுடன் விமானத்தில் வந்த மற்ற 2 பேரும் ABCDயில் சேரவந்திருந்தனர். ஏற்கனவே guest houseசில் 3 பேர் தங்கியிருக்க நாங்கள் மொத்தம் 6 பேர். Guest Houseசில் இரண்டு bedroomகளுடன் பார்பதற்கு நன்றாக இருந்தது. எல்லா room அறையிலும் carpet இருந்தது. துரதிருஷ்டவசமாக 5 பெட்கள் தான் இருந்தது. எனக்கு ஹாலில் உள்ள sofaதான் கிடைத்தது. அம்மா airportடில் அழு என் வாழ்கையிலேயே இன்று மிகவும் சந்தோஷமான நாள். 



 Nov 14, வெள்ளி


[%image(20050922-frame2.jpg|170|148|D2)%]

ABCD companyயில் என் முதல் நாள். சிறிய அலுவலகம். பிரசிடண்டுக்கு Presidentக்கு தனி அறை. marketingக்கு ஒரு அறை. Accounts, HR க்கு ஒரு அறை. கூடுதலாக ஒரு அறை அதில் நாங்கள் software engineers. நாங்கள் மொத்தம் 13 பேர் Bench Periodல் clientடுக்காக காத்திருந்தோம். முதல் நாள் சில formகளை fill செய்தோம். Bank account, Social Security #, apply செய்தோம். என்னுடன் வேலை செய்யும் சங்கர் SS# மிகவும் முக்கியம் என்றான். president புதிதாக வந்த எங்கள் மூவரையும் அவர் அறைக்கு கூப்பிட்டு ABCD company பற்றியும், interviewக்கு சில நுணுக்கங்களையும் tips சொன்னார். எனது அமெரிக்க நண்பன் சங்கர் அமெரிக்க வாழ்வை பற்றி சொன்னான். இங்கு ஒரே குளிராக இருக்கிறது.


Nov 15, சனி
காலை 11:30க்கு எழுந்தேன். சங்கர் wall-martக்கு அழைத்து சென்றான். தயிர், பால், apple வாங்கினேன்.ஐந்து $. பெண்கள் எல்லோரும் சிகப்பாய் இருக்கிறார்கள். சங்கர் எல்லோரையும் கிண்டல் செய்தான். road cross பண்ணுவதர்க்கு signalலில் button உபயோகிக்க கத்து குடுத்தான். roadல் இந்தியர்கள் மட்டும்தான் நடந்துக்கொண்டிருந்தார்கள்.


Nov 16, ஞாயிறு காலை 9:30க்கு எழுந்தேன். பருப்பு, carrot, உருளைக்கிழங்கு, வெங்காயம் எல்லாவற்றையும் கொதிக்கவைத்து சாம்பார் செய்தோம். calling card வாங்கினேன். அம்மா,அப்பாவிடம் 5நிமிடம் பேசினேன். இரவு pizza சாப்பிட்டோம். எனக்கு pizza பிடிக்கவில்லை.


Nov 19, புதன்


[%image(20050922-frame3.jpg|140|143|D3)%]

சங்கர் இங்கு வழக்கில் உள்ள சில சொற்கள் சிலவற்றை சொல்லிகொடுத்தான். இது america இல்லை US.இங்கு எல்லோரையும் 'guy' என்று அழைப்பார்கள். நாங்கள் software engineers இல்லை, consultants. இந்தியர்கள் எல்லோரும் 'desis'. சங்கர் எல்லாவற்றிக்கும் 'great' என்று சொல்லவேண்டும் என்றான். அமெரிக்க நாணயங்கள் எனக்கு பழக்கமாகிவிட்டது. நான் இங்கு நிறைய கற்றுக்கொள்கிறேன். நான்தான் எல்லோருக்கும் சமையல் செய்கிறேன். 


Nov 20, வெள்ளி


[%image(20050922-frame4.jpg|200|144|D4)%]

Guest houseல் உள்ள இரண்டுபேருக்கு client கிடைத்துவிட்டார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம், இப்போழுது அவன் படுக்கையில் நான் தூங்கலாம். bedல் படுப்பது சுகமாக உள்ளது. இப்போழுது 'bench'ல் 11பேர். 3-4 பேர் இந்தியாவில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். வீட்டிற்கு 'காலிங்கார்டு' மூலமாக பேசினேன்.இங்கு ரொம்ப 'home sick'காக இருக்கிறது. US வந்திருக்க கூடாதோ ? என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது. America அப்படி ஒண்ணும் பிரமாதம் இல்லை, இந்தியா அப்படி ஒண்ணும் மோசமும் இல்லை. எனக்கு ஒரே ஆறுதல் சங்கர். சங்கர் இப்படித்தான் இருக்கும் என்றான். Client கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றான். எப்போழுது எனக்கு client கிடைப்பான். கந்தசஷ்டிகவசம் தினமும் காலையில் சொல்கிறேன். ATM card வந்துவிட்டது. ATM card எப்படி use பண்ணுவது என்று எனக்கு இப்போழுது தெரியும். எனக்கு washing machine, dish washer எப்படி உபயோகிப்பது என்று இப்பொழுது தெரியும். my skill set is growing.


Nov 27, வியாழன்


[%image(20050922-frame5.jpg|170|243|D5)%]

இன்று ஒரு 'desi' ஏஜண்டுடன் ஒரு telephone interview இருந்தது. Atlanta விற்கு செல்லவேண்டியிருக்கலாம். அட்லாண்டா எங்கு உள்ளது என்று Mapல் தேடிப்பார்த்தேன். அட்லாண்டா Georgia stateல் இருந்தது. அட்லாண்டாவில் நிறைய afro-americans இருப்பதாக சங்கர் சொன்னான். எனக்கு social security number கிடைத்துவிட்டது. சங்கர் இந்த number ரொம்ப முக்கியம் என்றான். இங்கு temperature zeroடிகிரிக்கு கீழ் சென்றுவிட்டது. 


 


Dec 5, வெள்ளி


[%image(20050922-frame7.jpg|170|194|D7)%]

Atlanta interview நடக்கவில்லை. benchல் உள்ள மற்றவர்கள் இதெல்லாம் சகஜம் என்றார்கள். மற்றோரு 'desi' ஏஜண்டுடன் பேசினேன். Seattle செல்லவேண்டியிருக்கும் என்றார்கள். Seattle எங்கு உள்ளது என்று Mapல் தேடினேன். Seattleல் Washingtonல் இருக்கிறது. சங்கர் அங்கு நிறைய மழை பெய்யும் என்றான். இங்கு christmas இன்னும் சில நாட்களில் வந்துவிடும். எல்லா இடத்திலும் light decoration செய்து இருக்கிறார்கள். நான் முதல் முதலில் இன்று snow பார்த்தேன். snow எனக்கு ரொம்ப பிடித்தது. அம்மா swetter போட்டுக்க சொன்னா. சங்கர் Amwayகாரர்களிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றான்.


Dec 13, சனி


[%image(20050922-frame8.jpg|170|170|D8)%]

இன்றோடு USக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. I am very depressed today. சங்கர் டிசம்பர் 2ஆம் வாரம் முதல் ஜனவரி இரண்டாம்


 வாரம் வரை யாருக்கும் Project கிடைக்காது என்றான். Holiday season. கடவுளே எனக்கு இந்த வாரத்திற்குள் ஒரு project கிடைக்குமாறு செய். சங்கருக்கு இன்றோடு 1 1/2 மாதம் bench பீரியட் complete ஆனது. அவனுக்கு இனிமேல் முழு சம்பளம்.


Dec 22, திங்கள்
ஜனவரி இரண்டாம் வாரம் வரை project கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. சில சமயம் இந்தியா சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது. என்னிடம் இந்தியா செல்லும் அளவுக்கு பணம் இல்லை. இன்னும் bench periodல் தான் இருக்கேன். ஒரே நல்ல சேதி இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 35.45 ஆகிவிட்டது. இன்று என் வாழ்கையின் மிகவும் சோகமான நாள்.


Dec 25, வியாழன்
இன்று christmas. எல்லா இடமும் lightகளாள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எல்லேரும் vacationல் சென்றுவிட்டார்கள். எல்லோரும் ஆனந்தமாக இருக்கிறார்கள், என்னை தவிர.


Jan 1 செவ்வாய் இன்று புத்தாண்டு. இந்தியாவிற்கு phone கிடைக்கவில்லை. நாளை விட்டிற்கு phone செய்ய வேண்டும். என்னுடைய new year resolution எப்படியாவது ஒரு client பிடிப்பது


Jan 7 புதன்
சென்ற 2 வாரம் யாருக்கும் client கிடைக்கவில்லை. president எல்லோரையும் interviewக்கு prepare செய்யும் மாறு சொன்னார். Interviewக்கு wait பண்ணுவது மிகவும் கடியாக உள்ளது. இன்றோடு 1 1/2 மாதம் ஆகிறது. நாளையிலிருந்து எனக்கு முழு சம்பளம்.


Jan 13 செவ்வாய்
இரண்டு பேருக்கு நேத்திக்கு client கிடைத்துவிட்டார்கள். இன்று மற்றுமோர் 'Desi Agent'டிமிருந்து call வந்தது. 'Research triangle' செல்ல வேண்டியிருக்கும். north caralonia வில் இருக்கு என்றார்கள். Mapல் north caraloniaவை தேடினேன். அது East Coastல் இருந்தது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 37.35. மூன்று நாள் முன்னாடி செய்த குழம்பை சுடவைத்து சாப்பிட்டேன்.இந்தியாவில் இப்படி சாப்பிட்டதில்லை


Jan 15 வியாழன்


[%image(20050922-frame9.jpg|170|174|D9)%]

Research triangle interview OK. 'desi agent' நான் நன்றாக செய்து இருக்கிறேன் என்றான். North Carolina பற்றி Information சேகரிக்க ஆரம்பித்து விட்டேன். சங்கருக்கு இன்று client கிடைத்து விட்டது - Denverல். Denver எங்கே இருக்கிறது. நேற்று இந்தியாவில் பொங்கல் பண்டிகை என்று மறந்தே போய்விட்டேன்.


Jan 20 செவ்வாய்
Research Triangleல்லிருந்து ஒரு செய்தியும் இல்லை போன வாரம் 3-4 பேருக்கு client கிடைத்துவிட்டார்கள். சங்கர் இல்லாமல் ரொம்ப போர் அடிக்கிறது.


Jan 26 திங்கள்
இன்று மற்றோரு 'desi agent'டிடம் இருந்து call வந்தது. Ohioவில் ஒரு client என்றார்கள். Mapல் Ohio எங்குள்ளது என்று பார்க்க விருப்பம் இல்லை. இன்று இந்தியாவின் குடியரசு தினம். வாழ்க இந்தியா.


Jan 30 வெள்ளி
Ohio Client என்னை தேர்ந்தெடுத்து விட்டார்கள்!. இந்த weekend நான் ohio செல்ல வேண்டும். ohio பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. Ohio என்று சொல்வது styleலாக உள்ளது. Ohio client contract 3 மாதம். extend ஆகலாம் என்றார்கள்.


Feb 2 திங்கள்


[%image(20050922-frame10a.jpg|170|174|D10a)%]

client officeல் எனது முதல் நாள். ABCD consultancy ஒரு motelலை புக் செய்து கொடுத்தார்கள். officeக்கு ஒரு cabல் சென்றேன். $8. மிகவும் அதிகம். client officeக்கு formal உடை அணிந்து சென்றேன். client officeல் dress code casual. Manager casual dressல் வரலாம் என்றார். எனது முதல் நாள் நன்றாக was cool. எனது மேனேஜர் phone, செராக்ஸ், காப்பி மிஷின் எப்படி உபயோகிப்பது என்று சொல்லித்தந்தார். மேனேஜர் ரொம்ப நல்லவர். அவர் பேசும் accent எனக்கு புரியவில்லை. அவருக்கும் நான் பேசுவது புரியாது என்று நினைக்கிறேன். இந்த கம்பெனியில் நிறைய 'desi's' இருக்கிறார்கள். எல்லோரும் 'consultants' ஒரு தேசி என்னை motelலுக்கு காரில் டிராப் செய்தான். ஆந்திராவிலிருந்து வந்ததாக சென்னான். அவன் ரொம்ப நல்லவன். நாளைக் காலை என்னை pick up செய்வதாக சொன்னான். Amway ஆளாக இருக்க மாட்டான் என்று நினைக்கிறேன். 


 Feb 13 வெள்ளி


[%image(20050922-frame10b.jpg|170|146|D10b)%]

ஒரு தேசி அப்பார்ட்மெண்டுக்கு shift செய்து விட்டேன். அடுத்து ஒரு car வாங்க வேண்டும். என்ன கார் வாங்குவது. யார் loan கொடுப்பார்கள். சங்கர் நேற்று call செய்திருந்தான். Japaneese கார் வாங்கு என்றான். நிறைய மைலேஜ் குடுக்கும் என்றான்.



Feb 28 சனி


[%image(20050922-frame11.jpg|170|178|D11)%]

Honda civic கார் வாங்கினேன். இங்கு வாழும் 'தேசி'கள் முக்கால் வாசிபேர் Honda civic (அ) toyota corolla தான் வைத்திருக்கார்கள். கோவிலுக்கு carல் சென்றேன். அர்ச்சகர் என காருக்கு ஒரு special புஜை செய்தார். $50 கொடுத்தேன். கடவுளை மறக்க கூடாது. எனது முதல் கார். இப்போழுது நான் officeக்கு காரில் செல்லலாம். அம்மாவிற்கு போன் பண்ணி சொல்லவேண்டும். 


 March 2 திங்கள்
கார் ஓட்ட நன்றாக பழகவேண்டும். அடிக்கடி i am getting 'honks'.


March 10 செவ்வாய்


[%image(20050922-frame12.jpg|170|162|D12)%]

போன வாரம் ஒரு camera வாங்கினேன். காரை போட்டோ எடுத்து அம்மாவிற்கு அனுப்பினேன். போட்டோ ரொம்ப நன்றாக இருந்தது. வீட்டிற்கு $1000 அனுப்பினேன். They are surely going to be proud of me. இப்போழுது நான் கார் நன்றாக ஓட்ட கற்று கொண்டு விட்டேன்.


March 16 திங்கள்
client officeல் வேலையே இல்லை. என்னை எதற்கு வேலைக்கு அமர்த்தினார்கள் ?. வேலை இல்லாமல் it is boring. Internet, e-mail, telephone இருக்கவே பொழுது போகிறது. சங்கர் மற்றும் பிற நண்பர்களுடன் telephoneல் தினமும் பேசுகிறேன். வீட்டிலிருந்து telephone பேசுவதை குறைக்கணும். இந்த மாதம் telephone bill $400. இந்தியாவிற்கு எனது காரை பற்றி செல்ல நிறைய பேசிவிட்டேன். இதை தவிர்த்திருக்கலாம். நேற்று எனது கார் skid ஆனது. இனிமேல் பார்த்து ஓட்டவேண்டும். அடிக்கடி வீட்டிற்கு call செய்வதை


April 2 வியாழன்
client officeல் இன்னும் வேலையே இல்லை. 8மணி நேரம் பொழுதை கழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. driving test பாஸ் செய்துவிட்டேன். சங்கர் ABCD consultingகை விட்டுவிட்டதாக சொன்னான். மற்றுமோர் 'desi' companyயிடம் சேர்ந்துவிட்டான். அவர்கள் 60K தருகிறார்கள். சங்கர் அதிர்ஷ்டக்காரன். 45Kயை வைத்துக்கொண்டு இங்கு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் ?


April 6 திங்கள்
என்னுடைய client ஒரு மணிக்கு $65 charge பண்ணிகிறான். அதாவது வாரம் 65 * 40 = $2600. 2600 * 52 = $135200 per annum. ஆனால் எனக்கு 45K தான். ABCD consulting என்னை ஏமாற்றுகிறது. என் அம்மா அப்பா விடம் இதை சொன்னால் அவர்கள் ரொம்ப சந்தோஷபடுவார்கள். என்னுடைய மதிப்பு $135200. ( $135200 * 37Rs = 5002400 Rs )


April 29 திங்கள்
என்னுடைய project இன்னும் 6 மாதம் extend செய்து விட்டார்கள். இன்னும் எனக்கு வேலை இல்லை. சம்பளம் கிடைக்கிறது. Javaவில் வேலை செய்பவர்கள் 70-75K வாங்குகிறார்களாம் ?


May 10 வெள்ளி mother's dayக்கு ஒரு கார்டு அனுப்பவேண்டும்.


July 10 வெள்ளி


[%image(20050922-frame14.jpg|170|189|D14)%]

நயகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நிறைய photo எடுத்து இந்தியாவிற்கு அனுப்பினேன். கடந்த 2 மாதம் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. ABCD consulting எனக்கு 10K உயர்த்தியிருக்கார்கள். இப்போழுது எனக்கு 55K. இன்னுமோர் 'desi' company 65K தருவதாக சொல்லி இருக்கார்கள். 'Green card' processingங்கும் பண்ணுவதாக சொல்லியிருகார்கள். அந்த companyக்கு mostly மாறிவிடுவேன். US வந்ததே பணம் சம்பாதிப்பதற்கு தானே ?


August 15 சனி
இன்று நமது சுதந்திரதினம். என்னுடைய புதிய H1 வந்துவிட்டது. நான் ABCDயை விட்டுவிட்டேன். XYZடிடம் சேர்ந்துவிட்டேன், ஆனால் அதே client தான். ரூபாயின் மதிப்பு இன்று 39.40. என்னை போல் உள்ள NRIக்கு இது நல்ல செய்தி.


September 10 வியாழன் Green card processing ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு 4 வருடம் ஆகும் என்கிறார்கள். அப்பாவிடம் இருந்து இன்று ஒரு கடிதம் வந்தது. சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள சொல்லுகிறார்கள். என்னுடைய எதிர்பார்ப்பு என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய எதிர்பார்ப்பு என்ன ? அவள் அழகாக ஒரு software engineer ஆக இருக்கவேண்டும். இங்கு வந்து வேலை செய்ய வேண்டும். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்தால் நிச்சயம் 120Kக்கு மேல் சம்பாதிக்கலாம். Wow!!. நான் ஒரு Lexus கார் வாங்கலாம். கல்யாணத்திர்க்கு முன் நான் நிறைய வாங்கவேண்டும். முதலில் ஒரு வீடு பார்க்கவேண்டும், படுக்கை வாங்கவேண்டும். இப்பொழுது sleeping bedல் தான் படுக்கிறேன். நிறைய இருக்கிறது. இன்னும் ஒரு வருடம் காத்திருக்கசொல்லலாம். அப்பாவிற்கு கடிதம் எழுதவேண்டும். peoplesoft consulting 80K குடுக்கிறார்கள் ?. எனக்கு எப்போழுது 80K கிடைக்கும் ??. 


September 13 ஞாயிறு
TV வங்கலாம் என்று முடிவு செய்தேன். நல்ல TV $100. cheapஆக வாங்கவேண்டும். Wall Mart கூப்பன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


September 14 திங்கள் இன்று சங்கரிடம் இருந்து e-mail வந்தது. சங்கருடைய தம்பி USக்கு ABCD வழியாக வந்துவிட்டான்.விட்டிற்கு call செய்ய வேண்டும், ஆனால் எனது காலிங் கார்டுல் மிச்சம் 5 நிமிடம்தான். officeலிருந்து நாளை பேசவேண்டும்.


 September 18 வெள்ளி
சங்கருடைய தம்பியை திருப்பி இந்தியாவிற்கு அனுப்பிவிட்டார்கள். client கிடைக்கவில்லையாம் பாவம். சங்கருக்கு 70K இப்போழுது. இந்தியாவிற்கு வருமாறு அழைக்கிறார்கள். சில பெண்கள் பார்த்து வைத்திருக்கார்களாம். Photoவை பார்த்து Yes (அ) No சொல்லவேண்டும்.


September 25 வெள்ளி
டயரி எழுத நேரம் கிடைக்கவில்லை. நிறைய வேலை. நிறைய வேலை செய்யவில்லை என்றால் லீவு தரமாட்டார்கள்.


 October 3 சனி


[%image(20050922-frame15.jpg|170|214|D15)%]

பெண்களின் photoக்களை பார்த்தேன். 4 photoக்கள் இருந்தது. My parents have short listed them out of 20. 4ல் 2 பரவாயில்லை.


October 5 திங்கள்
25 நாள் leave கிடைத்துவிட்டது. இந்த leaveல் கல்யாணத்தை முடித்து விடவேண்டும். tickets book செய்து விடவேண்டும்.


October 14 புதன்
tickets book செய்து விட்டேன். இந்தியாவிற்கு 28 கிளம்புகிறேன். அந்த இரண்டு பெண்களில் யாரை கல்யாணம் செய்துக்கலாம் ? ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒரு பெண் Btech மற்றொருத்தி MCA.


October 18 ஞாயிறு
சங்கர் என் வீட்டிற்கு வந்திருந்தான். இந்த வாரம் இந்தியா செல்கிறான் - கல்யாணம் செய்துக்கொள்ள. பெண் நல்ல வசதி படைத்தவள். Pizza சாப்பிட்டேன் நன்றாக இருந்தது. சங்கருடைய accent இப்போழுது மாறிவிட்டது, ஆனால் செயற்கையாக இருந்தது. 


October 23 வெள்ளி
நிறைய choclates வாங்கினேன். சில T-Shirt வாங்கினேன் ( Made in India, Bangladesh ). B.Tech படித்த பெண்னை கல்யாணம் செய்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். பணக்கார குடும்பம்

Comments