Skip to main content

Posts

Showing posts from August, 2016

பாவம் போக்கும் பாலம்

எங்கும் ராமர் கலர் “உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன் பார்த்துக்க” என்ற மெரட்டலுக்கு அடிபணியாத சினிமா கதாநாயகன் மாற்றப்படும் இடமான இராமநாதபுரத்துக்கு தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புல்லாணி திவ்யதேசம். எந்த கல்லுரியிலும் தமிழில் முனைவர் பட்டம் வாங்காத ஆண்டாள் “ஓத மாகடல் வண்ணா உன் மண     வாட்டி மாரோடு சூழறும் சேதுபந்தம் திருத்தினா யெங்கள்     சிற்றில் வந்து சிதையேலே - 520 என்று எந்த எஞ்சினியரிங் காலேஜிலும் பட்டம் வாங்காத ஸ்ரீராமருக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப் பட்ட சேது என்று மங்களாசாசனம் செய்கிறார். ‘ஸேது’ என்றால் வடமொழியில் “அணை” என்று பொருள். “ஆஸேது ஹிமாசலம்” என்று பழங்கால வழக்கு 400கிமீ தள்ளி, தற்போது “இமயம் முதல் குமரி வரை” என்று மாறிவிட்டது. “திருஅணை காண அருவினை இல்லை” என்ற பழமொழிக்கு சுலபமான அர்த்தம் - இராமர் கட்டிய இத் திருஅணையை பார்த்தால் நம் பாவங்கள் போகும். பார்த்தாலே பாவங்கள் போகும் என்கிறார்கள். நான் பார்த்து, குளித்துவிட்டு என்னுடைய பாவ கவுண்டரை ரிசெட் செய்துவிட்டு திரும்பினேன். கோடியில் இருக்கும் தனுஷ்கோடி திருப்புல்லாணிக்கு

நோ நான்சென்ஸ் டாக்டர்

இரண்டு வருஷம் முன்வேலை நிமித்தமாக, சென்னைக்கு வந்தவுடன் தொண்டை கட்டிக் கொண்டு, ஜுரம் வந்தது. தி.நகரில் பதினைந்து வருஷத்துக்கு முன் எனக்குப் பழக்கப்பட்ட டாக்டர் விஜயராகவனிடம் சென்றேன். கிளினிக் பெரிதாக மாறவில்லை, காத்துக்கொண்டு இருந்தபோது, பலகையில் இரண்டு வரி எழுதியிருந்ததைப் படித்து ஆச்சர்யப்பட்டேன். ‘Sulphonylurea போன்ற டயபட்டீஸ் மருந்துகளைக் கொண்டு வரும் மெடிக்கல் ரெப்களுக்கு இங்கே அனுமதி இல்லை.’ அடுத்த வரி இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. உங்களுக்கு டயபட்டீஸ் இருக்கா அதை ரிவர்ஸ் செய்யலாம்!” டாக்டரிடம் விசாரித்தேன். ஞாயிற்றுக்கிழமை இதைப்பற்றிப் பேசுவேன். வந்து கேளுங்களேன்” என்றார். ஞாயிறு அவர் பேச்சைக் கேட்டபோது தெளிவு பிறந்தது. வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றை முழுவதும் நிராகரித்தார். மேலும் – தினமும் காலை பிரட் சாப்பிடுங்கள், இரவு சப்பாத்தி சாப்பிடுங்கள், நிறையப் பழங்கள் எடுத்துக்கோங்க, வாக்கிங் போங்க, தினமும் ஆறு வேளை சாப்பிடுங்கள் போன்ற எல்லாவற்றையும் நிராகரித்தார். அவருடைய இரண்டு மணி நேரம் பேச்சின் சாராம்சம் இதுதான். மனிதன் நூறு வயது வா

ஆசார டயட்

ஆசாரமாக இருந்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது. ஆசாரம் இருப்பது ஏதோ ஐயர், ஐயங்கார் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம். கல்கி கட்டுரையைப் படித்துவிட்டு பலர் ”என்ன டயட் சார்?”  என்று கேட்கிறார்கள். டயட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முடிந்தவரை ஆசாரமாக இருப்பதும். ஆசாரமாக இருந்தால் உடல், மனம் அழுக்காகாமல் இருக்கும். ஏகாதசி அன்று முக்கியமான கோயிலின் முக்கியமான அர்ச்சகர் வெஜிடபுள் பிரியாணி பச்சை வெங்காய பச்சடியுடன்சாப்பிடுவதை பார்த்தேன். அதே போல யாத்திரையில் குடுமி வைத்த வைதீகர் முட்டை ஆம்லட் போடும் கடையில் காலில் செருப்புடன் டீ போட்டுக்கொண்டு இருந்தவருடன் டீ வாங்கிக் குடித்தார்,  தன் மடியான வெள்ளி டம்பிளரில் !

காஞ்சிபுரத்து அணில்கள்

காஞ்சிபுரம்  குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித் தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன் ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப் போகின்றன. அதைப் பார்த்த அணில்கள் மலையைத் தூக்க இயலாத அணில் கூட்டம் கடலில் உள்ளே சென்று தங்கள் உடலை ஈரமாக்கிப் பின் அந்த ஈர உடலில் மண்ணைப் புரட்டிக்கொண்டு ஓடிச் சென்று மண்ணை உதறி அணைகட்ட உதவுகின்றன. நான் அந்த அணில் போல் நான் இல்லையே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையில் வருத்தப்படுகிறார். சிலரைப் பார்க்கும் போது நமக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறது. அடியேனுக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் காஞ்சிபுரத்தில் ஏற்பட்டது. அதைச் சொல்லும் முன் என் பயணக் குறிப்பு சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன். விமானம், புஷ்கரணி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சிபுரம். ஆழ்வார்களைத் தவிர, வேதாந்த தேசிகன் ( திராமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ), கூரத்தாழ்வான் (வரதராஜ ஸ்தவம்), ஸ்ரீமணவாள மாமுனிகள் (ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம்) என்று பாடியுள்ள

கண்களை திறக்கும் மூடிகள் !

யானை வாகனத்துடன் திரு சுந்தரராஜன் Recycle' என்ற வார்த்தைக்கு நச்சென்ற ஒரு தமிழ் வார்த்தை இல்லை.மறுசுழற்சி, மறுபயன்பாடு என்ற வார்த்தைகள் இருந்தாலும், அவை உபயோகித்தால் உடனே நம் மனதுக்குச் சட்டென்று அதன் பொருள் உறைப்பதில்லை. ’கபாலிடா’ போன்ற ஒரு வார்த்தையை நேற்று காஞ்சிபுரத்தில் இதற்கு கண்டுபிடித்தேன். அந்த வார்த்தை ‘’சுந்தரராஜன்’ அவர் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்த போது மாடிப்படியின் மேல் காஞ்சி தேவ பெருமாளும் தாயாரும் காட்சி தந்தார்கள். அடியேனின் பக்தி பெருமாள் தாயாருடன் காட்சி தரும் அளவிற்கு பிரமாதம் இல்லையே எப்படி என்று நினைத்து அவரிடம் ”மேலே பெருமாள்... “ “மூலவர் தான் மேலே போய் பாருங்க” தேவராஜ பெருமாள் படிக்கட்டு மாதிரியே ஏறிக் கிட்ட சென்ற போது பல ஆச்சரியங்கள் கத்துக்கொண்டு இருந்தது. தாயார் முகம் ஏதோ பழைய தண்ணி மக். பெருமாள் கீரிடம் ஏதோ பழைய பிளாஸ்டிக் கூடை, கை ஏதோ பழைய பைப் ( இனி நான் சொல்ல போகும் எல்லாவற்றிலும்‘பழைய’ என்ற வார்த்தையை சேர்த்துப் படிக்கவும் ). கண்களுக்கு மூடிகள், துணிகள், துணி உலர்த்தும் கம்பி, அட்டைப் பெட்டி என்று ஒரு மினி வேஸ்ட்’ பேப்பர் கடையே