Skip to main content

கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் - சில விளக்கங்கள்

கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் என்று அடியேன் போன வாரம் எழுதிய கட்டுரை பலரை சென்று அடைந்துள்ளது.
’தானான திருமேனி’யின் மீது கொண்ட அன்பினாலும், ஸ்ரீராமானுஜரின் கொள்கைக்கு விரோதமாக ( தோஷ நிவர்த்தி ) இருப்பதாலும் எழுதிய பதிவு அதில் யாரையும் புண்படுத்தவோ குற்றம் சொல்லவோ அடியேனின் நோக்கம் கிடையாது.
விழுப்புணர்வு கருதி எழுதிய பதிவு. இருந்தாலும் 
சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
1. அன்பர் AMR கண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பிய மடலில் ஜோதிடர் AMR அவர்கள் ’பாக்கெட்’ பால் உபயோகப்படுத்தியதை கண்டித்துள்ளார் என்றும் குமுதம் ஜோதிடம் 2014ல் அதை பற்றியும் எழுதியுள்ளார் என்றும் அதன் பிரதியை அடியேனுக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு என் நன்றி. ( அதை இங்கே பகிர்ந்துள்ளேன் ).


2. மேலும், பல வருடம் முன்பு வரை ஸ்ரீபெரும்புதூரில் கூட்டமே இருக்காது ஆனால் திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் ஸ்ரீராமானுஜர் பற்றி எழுதிய பின் கோயிலுக்கு பலர் விஜயம் செய்து, அதனால் பல திருப்பணிகள் நடந்தது என்றும் கூறியிருக்கிறார்.
2. ஸ்ரீபெரும்புதூரில் என் நண்பர்கள் சிலர் ’தானான திருமேனி’யான உடையவர் திருமஞ்சனத்துக்கு ‘பாக்கெட்’ பால் உபயோகப்படுத்துவதில்லை என்று எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள். அவர்களுக்கும் என் நன்றி. இன்னொருவர் இரண்டு வருடம் முன்பு பாக்கெட் பால் சம்பர்பித்த போது, அதை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
4. தோஷ பரிகாரம் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. அதையும் யாரும் செய்ய மாட்டார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
மேற் கூறிய காரணத்தால் அடியேன் சில பகுதிகளை மாற்றி எழுதியிருக்கிறேன்.
முன்பு எழுதிய பதிவால் மனம் புண்படும்படியாகவோ அல்லது தவறாக எழுதியிருந்தாலோ ஷமிக்க பிராத்திக்கிறேன்.
( மற்றப்பட்ட பதிவு இங்கே http://sujathadesikan.blogspot.in/2017/03/blog-post_6.html )


Comments