Skip to main content

Posts

Showing posts from September, 2005

சோழர்

வரலாற்றுப் பாடம் இன்றும் பள்ளிகளில் கொஞ்சம் போரான பாடம் தான். அதற்கு காரணம், நம் பள்ளிகளில் அதை நடத்தும் விதம். (சில பள்ளிகள் இதற்கு விதிவிலக்கு). இன்று பள்ளிகளில் வரலாற்று பாடம் இந்த கட்டுரை மாதிரி இருந்தால் நிச்சியம் மாணவர்கள் விரும்பி படிப்பார்கள். முதல் முயற்சியாக சோழர் ( குறிப்பாக ராஜராஜ சோழன் ) பற்றி இந்த கட்டுரை. (கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இருக்கும்.) தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் " சோழ " என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. உலக்கை - ஒலக்கையாக மாறலாம் என்றால் 'சூழ' - 'சோழ' வாக மாறியதில் வியப்பில்லை.  தமிழ் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிந்திருக்கும். சமிஸ்கிரதித்தில் 'திருடன்' என்றும் சொல்லுவதுண்டு. சோழர்க்குறிய பெயர்களில் 'கிள்ளி வளவன்'   பிரபலமானது. ஆராய்ந்தால் "கிள், தோண்டு, வெட்டு" என்னும் பல பொருள்களைக் குறித்து "நிலத்தை தோண்டி வளம் செய்பவன்" என்பது கிள்ளி வளவன் என்று வந்திருக்கலாம்.

ஒரு தேசி(கன்?)யின் Diary குறிப்பு

[%image(20050922-frame0.gif|80|111|Dairy0)%] இது சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது. இதை படித்துவிட்டு இன்றும் யாராவது எனக்கு ஈ-மெயில் அனுப்புவதற்கு காரணம் டாலர் ரூபாய் மதிப்பைத் தவிற மற்ற எல்லாம் மாறாதது தான்.   என்னுடைய பழைய வளைத்தளத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இங்கே தந்துள்ளேன். இதற்கு sequelலாக "பெண் தேசியின டைரி குறிப்பு" எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கிறது. அதை சீக்கிறம் முடிக்க முடியுமா என்று பார்க்கிறேன். Nov 13, வியாழன் [%image(20050922-frame1.jpg|200|106|Dairy1)%] Americaவில் எனது முதல் நாள். NY JFK airport, ஒரு புதிய அனுபவம். Steve ABCDயில் பணிபுரிபவர், என்னை அழைத்துச்செல்ல வந்திருந்தார். என்னுடன் விமானத்தில் வந்த மற்ற 2 பேரும் ABCDயில் சேரவந்திருந்தனர். ஏற்கனவே guest houseசில் 3 பேர் தங்கியிருக்க நாங்கள் மொத்தம் 6 பேர். Guest Houseசில் இரண்டு bedroomகளுடன் பார்பதற்கு நன்றாக இருந்தது. எல்லா room அறையிலும் carpet இருந்தது. துரதிருஷ்டவசமாக 5 பெட்கள் தான் இருந்தது. எனக்கு ஹாலில் உள்ள sofaதான் கிடைத்தது. அம்மா airportடில் அழு என் வாழ்கையிலேயே இன்று

கல்யாண ஊர்வலம்

கல்யாண ஊர்வலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன் [%image(20050921-svr_image1.jpg|375|238|கல்யாண ஊர்வலம்-1)%] ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில் 1   உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள். நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த

சிவாஜி – சில உண்மைத் தகவல்கள்

'சிவாஜி' திரைப்படத்தைப் பற்றிய ஆரவாரமான மிகையான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஓர் 'இன்சைடர்' என்ற தகுதியில் இதன் மிகை தவிர்த்த உண்மைகளை அம்பலம் வாசகர்களுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அடிக்கடி இதைப் புதுப்பிக்கவும் செய்கிறேன். சிவாஜி படத்தை ஏ.வி.எம் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்க ஷங்கர் இயக்க, ஏ,ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் கதையின் முதல் வரைவு முடிந்துள்ளது. பாடல்களை கம்போஸ் செய்ய ஷங்கர், ரஹ்மானுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர்கள் யார் யார் என்பதெல்லாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஸ்க்ரிப்டை முடித்ததும் தான் இதெல்லாம் தீர்மானிக்கப்படும். இதனிடையே படம் எத்தனையோ கோடிக்கு வியாபாரமாகிவிட்டது என்னும் வதந்திகள் எல்லாம் தவறானவை. ஏ.வி.எம். போன்ற அனுபவமிக்க நிறுவனங்கள் அவ்வளவு அவசரப்படத் தேவையில்லை. படத்தின் கதையைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளும் தவறானவை. கதை மெல்ல மெல்ல இப்போதுதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் எந்தப் படம் எடுத்தாலும் நிதானமாக கதையை அணுஅணுவாக யோசித்துச் செய்வார். கதையை ரஜினிகாந்த

லொட்டு லொஸ்கு

"இந்த வாரம் நான் எதாவது சொல்லட்டுமா?" என்றது வேதாளம். "நீ என்ன பெரிசா சொல்லப்போற" என்றான் விக்கிரமாதித்தன். " ஒண்ணுமில்லாததை  பத்தி பெரிசா நீ சொல்லறப்போ நானும் எதாவது சொல்லலாம், தப்பில்லை". "சரி, முதல்ல தோள்லேர்ந்து இறங்கு, மூவ் தடவியே நான் ஏழையாயிடுவேன்" தோளிலிருந்து இறங்கிய வேதாளம் "எங்கே ஒரு பெரிய நம்பர் சொல்லு பார்க்கலாம்" என்று விக்கிரமாதித்தனை பார்த்து கேட்டது. "இது என்ன அசட்டுத்தனமான கேள்வி"  "சரி இந்த கதையை கேளு" என்று வேதாளம் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தது.... "முன்னொரு காலத்தில் ஹங்கேரி நாட்டில் இரண்டு பிரபுக்கள் இருந்தார்கள். ஒரு நாள் வாக்கிங் போகும் போது ஒரு வினோத விளையாட்டு விளையாடினார்கள். யார் பெரிய நம்பர் சொல்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். முதலாமவர் ஆட்டத்தை ஆரம்பித்தார். இரண்டாவது பிரபுவை பார்த்து "எங்கே ஒரு பெரிய எண் சொல் பார்க்கலாம்" என்றார். ஒரு முக்கால் மணி யோசித்துவிட்டு "மூன்று" என்றார். "இப்போது நீ சொல் பார்க்கலாம்" என்று கேள்வி கேட்டார் இரண்டாம் பிரபு

சாமி படம்

அந்த ஞாயிற்றுக்கிழமையை என்னால் மறக்க முடியாது. அன்று தான் நாங்கள் புளு ஃபிலிம் பார்க்கத் திட்டம் போட்டோம். நாங்கள் என்றால் நான், பக்கத்துவீட்டு பாபு, 'சபியா' செல்வம் ('சபியா' பற்றி பிறகு சொல்கிறேன்). அந்த நாள்களில் பாபு வீட்டில் மட்டும்தான் டிவி இருந்தது. சன், ஜெயா, ராஜ் எல்லாம் கிடையாது. தூர்தர்ஷன் மட்டும்தான். வெள்ளிக்கிழமையோ, புதன்கிழமையோ சரியாக ஞாபகம் இல்லை, சித்திரஹார் வரும். அதில் கடைசியில் வரும் (சில சமயம் நடுவில்) தமிழ்ப் பாட்டிற்காக ஹிந்தி தெரியாவிட்டாலும் கபூர், தர்மேந்திரா, வானவில் கலரில் வரும் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ஸ்லைட் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்போம். சித்திரஹார் மற்றும் கிரிக்கெட் பார்க்க மட்டும் பாபு வீட்டுக்குப் போவோம். மதியம் யூஜிசி ப்ரோகிராம் அல்லது பாபுவின் அப்பா வீட்டில் இருந்தால் டிவி பார்க்கப் போகமாட்டோம். பாபுவிற்கு திடீர் என்று பல சலுகைகள் கிடைத்தது. கிரிக்கெட்டில் முதல் 'காஜி', ஓர் ஓவரில் ஏழு பந்துகள், புல்டாஸாகப் போட்டுக்கொடுத்து சிக்ஸர் அடிக்க வைப்பது... சலுகைகளுக்குக் காரணம், பாபுவின் மாமா தூபாயிலிருந்து வாங்கி

படித்தேன், ரசித்தேன்

மற்றவர்களின் பதிவுகளில் நான் படித்து ரசித்தவற்றை "படித்தேன், ரசித்தேன்" பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன். வலது பக்கம்  அதற்க்கான சுட்டிகளை (ஹைப்பர் லிங்குகளை) கொடுத்துள்ளேன். இந்த வாரம் நான் படித்து ரசித்தவற்றை நீங்களும் படியுங்களேன்!.